’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவியின் சகோதரியாக நடித்த சுஜாதா குமார் மரணமடைந்தார்.
இந்தி நடிகையும் பிரபல இயக்குனர் சேகர் கபூரின் முன்னாள் மனைவியுமான சுசித்ராவின் சகோதரி, சுஜாதா குமார். மும்பையில் வசித்து வந்த இவரும் நடிகைதான். ஸ்ரீதேவியின் ’இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரது சகோதரியாக நடித்திருந்தார். மற்றும் கரண் ஜோஹரின் ’கோரி தேரே பியார் மெய்ன்’, தனுஷ் நடித்த ’ரான்ஜனா’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். சில டிவி தொடர்களிலும் நடித்துள்ள இவர் ஏராளமான விளம்பர படங்களில் பங்கேற்றுள்ளார்.
Read Also -> வாஜ்பாயை அவமதிக்கும் நோக்கம் இல்லை ! நடிகர் சங்கம்
Read Also -> கேரளாவுக்கு நடிகர் விக்ரம் ரூ.35 லட்சம் நிதியுதவி
கடந்த சில வருடங்களாக கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நோய் முற்றியதால், மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அனைத்து உடல் உறுப்புகளும் செயல் இழந்து விட்டதால் நேற்று இரவில் மரணமடைந்தார். மறைந்த சுஜாதா குமாருக்கு ஏராளமான திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித் துள்ளனர்.