துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து வெளியீட்டுக்கு தயாராகி வரும் படம் `ஐ அம் கேம்'. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். RDX படத்தின் வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீது பெரிய ஏதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படம் முதலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இன்னும் அதிகமான திரையரங்குகள் மற்றும் சர்வதேச சந்தைகளில் படத்தை வெளியிடுவதற்காக, ரிலீஸ் தேதி இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 3, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் 40-ஆவது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. மேலும், துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த பிரம்மாண்ட ஃபேண்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்தில் மிகப்பெரிய படங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.