Suriya, Sudha Kongara , Dulquer Salmaan
Suriya, Sudha Kongara , Dulquer Salmaan  Twitter
சினிமா

புதிய திரைப்படத்தில் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் கைகோர்க்கும் துல்கர் சல்மான்!

PT WEB

'கங்குவா' திரைப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மானும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சூர்யா - சுதா கொங்கரா இணைந்த வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் மாபெரும்  வெற்றிபெற்றது. அதன் அடையாளமாக 5 தேசிய விருதுகளையும் வென்றது. இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.அதுமட்டுமல்லாது  சூர்யா தற்போது நடித்து வரும் 'கங்குவா' திரைப்படத்தைத் தொடர்ந்து இந்த திரைப்படத்திற்கான வேலைகள்  தொடங்க உள்ள நிலலையில், இப்படத்தில்  மலையாள இளம் சூப்பர் ஸ்டார் துல்கர் சல்மானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் வெற்றி கூட்டணியாக அமையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.