விஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் விதமாக நடிகர் விஷால், கார்த்தி இணைந்து படம் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்தப் படத்தை பிரபுதேவா இயக்க இருந்தார். ஐசரி கணேஷ் தயாரிப்பதாக இருந்த இந்தப் படத்துக்கு ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’என்று டைட்டில் வைத்தனர். சாயிஷா ஹீரோயின். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. சமீபத்தில் இதன் தொடக்க விழா பரபரப்பாக நடந்தது. இதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜும் பிரபுதேவாவும் கம்போசிங்கிற்காக லண்டன் சென்றனர். இந்தப் படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இப்போது டிராப் ஆகிவிட்டது.
இதுபற்றி விசாரித்தபோது, ’விஷால், கார்த்தி இருவருமே பிசியாக இருப்பதால் அவர்களை இணைத்து படமாக்குவது முடியாததாக இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை பிரபுதேவா இப்போது இயக்கவில்லை. ஆனால் கார்த்தி அல்லது விஷால் நடிக்கும் படங்களை பின்னர் தனித்தனியாக இயக்கும் வாய்ப்பிருக்கிறது’என்றனர்.