சினிமா

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்: 3 பிரிவுகளில் வழக்கு

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் ஜெய்: 3 பிரிவுகளில் வழக்கு

webteam

குடிபோதையில் கார் ஓட்டி சென்று மேம்பாலத்தில் மோதிய நடிகர் ஜெய் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை 28, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெய். இவரது எங்கேயும் எப்போதும் படம் மக்களிடையே விபத்து தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது.‌ ஆனால் இவரே குடிபோதையில் காரை ஓட்டி கைதாகியிருக்கிறார். அதிகாலை இரண்டரை‌ மணி அளவில் அவர் ஓட்டி சென்ற சொகுசு கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்தது. போலீசார் முதற்கட்ட விசாரணையில் அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. ‌உடனே காரை பறிமுதல் செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ்  ‌வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். 

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மயிலாப்பூரில் ஜெய் இதேபோல குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியிருந்தார். மீண்டும் அதேபோன்று ஒரு விபத்தை ஏற்படுத்தியிருப்பதால் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது பற்றி போக்குவரத்து வட்டார அலுவலரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.