சினிமா

துருவங்கள் 16 மிஸ் பண்ணிடாதீங்க: முருகதாஸ்

துருவங்கள் 16 மிஸ் பண்ணிடாதீங்க: முருகதாஸ்

Rasus

சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிற துருவங்கள் பதினாறு படத்தை மிஸ் பண்ணிடாதீங்க என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

துருவங்கள் பதினாறு படம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முருகதாஸ், நைஸ் திரில்லர் என்றும் அருமையான திரைக்கதை என்றும் கூறியிருப்பதோடு.. நண்பர்களே இந்தப் படத்தை மிஸ் பண்ணிடாதீங்க என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். படத்தின் இயக்குனர் கார்த்திக் மற்றும் அவரது டீமுக்கு வாழ்த்துக்கள் என்றும் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தை சமீபத்தில் சிவகார்த்திகேயனும் பாராட்டியிருந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்கு உருவாக்கப்பட்ட படம்.. இளம் தொழில்நுட்பக் கலைஞர்களின் சிறந்த படைப்பு எனப் பாராட்டினார் சிவகார்த்திகேயன். நடிகர் ரகுமான், இயக்குனர் கார்த்திக் மற்றும் படக்குழுவுக்கு பாராட்டுகள் என்று அவர் கூறியிருந்தார்.