சினிமா

சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் தேதி மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

JustinDurai

'டான்' படம் மார்ச் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள டான் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து லைக்கா நிறுவனமும் தயாரித்திருந்தது.

டான் படம் முதலில் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படமான 'ஆர்ஆர்ஆர்' படமும் வருகிற மார்ச் 25 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் டான் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படலாம் என்று தகவல் பரவியது. தற்போது படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. அதன்படி ‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 13 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிக்க: 'விக்ரம்’ படத்தின் புதிய அப்டேட்... படக்குழு உற்சாக அறிவிப்பு