சினிமா

டாஸ்மாக் சீனா? வேண்டாம்! எஸ்கேப் ஆகும் யங் ஹீரோ

டாஸ்மாக் சீனா? வேண்டாம்! எஸ்கேப் ஆகும் யங் ஹீரோ

webteam

தண்ணி அடிக்கின்ற சீனில் இனி நடிக்க மாட்டேன் என்று இளம் நடிகர் சிவகார்த்திகேயன் முடிவெடுத்திருக்கிறார்.

‘இந்தப் பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுப்போச்சுடா’எனத் தண்ணியை அடித்துவிட்டு ஊரில் உள்ள எல்லா பெண்களையும் கலாய்க்கும் பாடல்கள் தமிழ் சினிமாவில் சகஜம். அந்தப் பாடல்கள் இளசுகளை உசுப்புவதற்காகவே திட்டமிட்டு வைக்கப்படுகின்றன. அப்படியான பாடல்களுக்கும் குத்து பாடல்களுக்கும் பல தருணங்களில் எதிர்ப்புக்கள் எழுகின்றன. ஆனால் அதை திரைத்துறை கண்டுக் கொள்வதே இல்லை. 

இந்நிலையில்தான் அதைப்போல பாடல்களில் இனி நடிக்கமாட்டேன். டாஸ்மாக் சீன் உள்ள காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அதோடு பெண்களை சீண்டுவதைபோல உள்ள காட்சிகளும் இனிமேல் என் படங்களில் இடம்பெறாது என்றும் இனி ஐந்து வருடங்களுக்கு என்னை பார்த்து இந்தக் கேள்வியை நீங்கள் இனி எழுப்பவே முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் இயக்குநர்களும் இதனை புரித்துகொண்டு காட்சிகளை அமைக்க முன் வரவேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.