சினிமா

கமல்ஹாசனுடன் இணைகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்?

கமல்ஹாசனுடன் இணைகிறாரா இயக்குநர் வெற்றிமாறன்?

Sinekadhara

கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தேசிய விருது வென்ற இவர், தற்போது விஜய்சேதுபதி - சூரி நடிப்பில் 'விடுதலை' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். அதேபோல் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்க்கும் கதை கூறியுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கும் ஒரு திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் விஜய் சேதுபதி, சூர்யா, விஜய் ஆகியோர்களின் படங்களை முடித்தபிறகே கமல்ஹாசன் படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் இறங்குவார் என்று கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் ’இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ’விக்ரம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர் முருகதாஸ் உடனும் கமல் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் இருவரும் தாங்கள் ஒப்பந்தம் செய்துள்ள படங்களை முடித்த பிறகு இணைவார்கள் என்று கூறப்படுகிறது.