நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பிடம் படத் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
“கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் ஒன்று எங்களை தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் அது அண்ணாத்த படத்திற்காகவா என தெரியவில்லை. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் எந்தவித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை” என நடிகர் ஜாக்கி ஷெராஃப் தரப்பு தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காலா, 2.0, பேட்ட மற்றும் தர்பார் மாதிரியான படங்களில் பாலிவுட் நடிகர்களே வில்லனாக நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜாக்கி ஷெராஃப் பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
கொரோனா அச்சுறுத்தலினால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.