ஒடிசாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை புவனேஷ்வரில் உள்ள அவரது வீட்டில் கமல்ஹாசன் நேற்று சந்தித்தார். அப்போது அரசியல் மற்றும் அரசியல் தாண்டிய விஷயங்களையும் இருவரும் கலந்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நவீன் பட்நாயக்கிற்கு அசோக சக்கரத்தை கமல் நினைவு பரிசாக அளித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.