சினிமா

சட்டசபையில் பேசப்பட்ட தமிழ் ராக்கர்ஸ்

சட்டசபையில் பேசப்பட்ட தமிழ் ராக்கர்ஸ்

webteam

சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் இணையப் பக்கங்களில் ஒன்று தமிழ் ராக்கர்ஸ். சவால் விட்டு படங்களை ஆன்லைனில் சட்டவிரோதமாக அப்லோட் செய்யும் இந்த பக்கத்தை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் ரஜினிகாந்த நடித்த காலா படத்தை கூட இந்த இணைய பக்கம் வெளியிட்டிருந்தது. இதன் அட்மின் யார், எங்கிருந்து அப்லோட் செய்கிறார்கள் என்ற தகவலை திரட்ட முடியாமல் காவல்துறையும் திணறி வருகிறது. 

தமிழ் ராக்கர்ஸ் பக்கத்துக்கு தடை விதிக்க பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் சில பக்கங்கள் முடக்கப்பட்டன. ஆனாலும் புதிய பெயரில் தமிழ் ராக்கர்ஸ் வந்தது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர், யார் இந்த தமிழ் ராக்கர்ஸ் என்று கேள்வி எழுப்பினார். மேலும் திரைப்படங்களை ரிலீஸ் ஆன அன்றே இண்டர்நெட்டில் விட்டு விடுகிறார்கள். அந்த இணையதளம் யாருடையது, அதன் உரிமையாளர் யார் ? என பேசினார். மேலும் இந்த தமிழ் ராக்கர்ஸ் சினிமாவில் கூறுவது போல ஆண்ட்டி ஹீரோ ஆகி விட்டது என்றும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.