நயன்தாரா - விக்னேஷ் சிவன் web
சினிமா

புதுவை| ’அடேங்கப்பா இது லிஸ்ட்லயே இல்லையே..’ அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்!

புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்ட சம்பவம் நடந்துள்ளது.

PT WEB

திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் உள்ள சினிமா படப்பிடிப்பிற்கான பல்வேறு பகுதிகளை நேற்று மாலை பார்வையிட்ட நிலையில், சட்டப்பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அரசு ஓட்டலை விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவன்..

அப்போது கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான சீகில்ஸ் ஓட்டலை தமக்கு விலைக்கு தருமாறு கேட்டுள்ளார். மேலும் அப்படி இல்லை என்றால் ஒப்பந்த அடிப்படையில் தர முடியுமா என்றும் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அரசுக்கு சொந்தமான இடத்தை தனியாருக்கு விற்பனையோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி

மேலும் புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இசை நிகழ்ச்சி நடத்த இடம் கிடைக்குமா என அமைச்சரிடம் விக்னேஷ் சிவன் கோரிய நிலையில், துறைமுக வளாகத்தில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விக்னேஷ்

அரசு ஓட்டலையே விலைக்கு கேட்ட விக்னேஷ் சிவனின் செயல் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.