சினிமா

”மிஸ் யூ சிம்பு: லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக்”: வெங்கட் பிரபு உருக்கம்

”மிஸ் யூ சிம்பு: லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக்”: வெங்கட் பிரபு உருக்கம்

sharpana

‘மாநாடு’ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொள்ளாமல் இருந்ததால், அவரை மிஸ் செய்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்

பல்வேறு தடங்கல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். டைம் லூப் கதையாக இருந்தாலும் தெளிவான திரைக்கதையால் ‘மாநாடு’ வெற்றியைக் குவித்தது. நேற்றுடன் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதையொட்டி இன்று படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது. இந்த விழாவில் நடிகர் சிம்புவைத் தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர். ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் சிம்பு இருக்கிறார் என்றும், அதேசமயம், ‘மாநாடு’ படத்தின் உரிமையைக் கேட்டு சமீபத்தில் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்திருப்பதால் சிம்புவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் மனவருத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், சிம்பு ‘மாநாடு’ வெற்றி விழாவில் கலந்துகொள்ளாததால் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் “மிஸ் யூ எஸ்டிஆர். லவ் யூ சோ மச் மை அப்துல் காலிக்” என்று வெற்றி விழாவில் சிம்பு இல்லாமல் மிஸ் செய்ததை பதிவிட்டுள்ளார்.