சினிமா

வசந்தபாலன் - அர்ஜுன் தாஸ் - ’சார்பட்டா’ துஷாரா விஜயனின் அநீதி ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

sharpana

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் -துஷாரா விஜயன் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.

கடந்த 2014 வெளியான ‘காவியத் தலைவன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் வசந்தபாலன் ‘ஜெயில்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்த நிலையில், ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் வசந்தபாலன். ’சார்பட்டா’ ஹீரோயின் துஷாரா விஜயன் நடிக்கிறார்.

இந்தப் படத்தை தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ’யூ பாய்ஸ் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் வசந்தபாலன். வனிதா விஜயகுமார், அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். ‘அநீதி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.