சினிமா

சொந்த ஊரிலேயே நடிகர்களைத் தேர்ந்தெடுத்த சுசீந்திரன்..கொரோனா த்ரில்லரில் பாரதிராஜா, ஜெய்..!

சொந்த ஊரிலேயே நடிகர்களைத் தேர்ந்தெடுத்த சுசீந்திரன்..கொரோனா த்ரில்லரில் பாரதிராஜா, ஜெய்..!

webteam

கொரோனா தொற்று கலையுலகில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், அதுவே புதிய படைப்புகளுக்குக் கருவாகவும் மாறிவருகிறது. இயக்குநர் சுசீந்திரன், தன் அடுத்த த்ரில்லர் படத்திற்கு கொரோனாவைத்தான் கதைக்களமாகக் கொண்டிருக்கிறார்.

மூன்று ஸ்போர்ட்ஸ் படங்களை கடந்த ஆண்டில் உருவாக்கிய அவர், ஜெய் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். அத்துடன் இயக்குநர் பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், திவ்யா துரைசாமி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் உள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கிராமங்களிலேயே முழுமையான படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ள சுசீந்திரன், கொரோனா காலத்தில் நடந்த சம்பவங்களை திரைக்கதையாக மாற்றி, கொஞ்சம் த்ரில்லர் கலந்து செய்யும் புதிய படத்திற்கான ஆரம்பக்கட்டப்பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டவுடன் ஷாட் ரெடி ஆக்சன் சொல்ல ஆரம்பிப்பார்கள். சொந்த ஊரான ஒட்டன்சத்திரத்தில் இருந்துகொண்டு படத்தில் நடிக்கவேண்டியவர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலையையும் முடித்துவிட்டாராம்.  நடிக்கும் யாருக்கும் சம்பளம் கிடையாதாம். படத்தின் லாபத்தில் பங்குதான் என்கிறார்கள்.