சினிமா

சிறை பின்னணியில் நடக்கும் ’திட்டி வாசல்'

சிறை பின்னணியில் நடக்கும் ’திட்டி வாசல்'

webteam

'கே 3 'சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீனிவாசராவ் தயாரித்திருக்கும் படம், 'திட்டிவாசல்'. மகேந்திரன், கன்னட நடிகர் சின்னி வினோத், தனு ஷெட்டி, ஐஸ்வர்யா, அஜய்ரத்னம், தீரஜ் அஜய்ரத்னம், ஸ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு ஜி.ஸ்ரீனிவாசன். ஹரீஷ், சத்தீஷ் ஜெர்மன் விஜய் என மூன்று பேர் இசை அமைத்துள்ளனர். 

படத்தை இயக்கி இருக்கும் எம். பிரதாப் முரளி கூறும்போது. 'போலீஸ் ஸ்டேஷனில் போடப்படும் முதல் தகவல் அறிக்கையைப் பொறுத்தே வழக்கின் தன்மை இருக்கும். ஆனால் அதிலுள்ள உண்மை நிலை தெரிவதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடக்கும். அந்தப் பாதிப்புகள் பற்றிய கதைதான் படம். இது முழுக்க முழுக்க சிறை பின்னணியில் நடக்கும் கதை. மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் யதார்த்தமாகப் பேசுகிறது. இது தனி ஒருவரின் கதையல்ல. விளிம்புநிலை சமூகம் சார்ந்த பதிவு' என்றார். வரும் 22-ல் படம் ரிலீஸ் ஆகிறது.