திரைப்பட இயக்குனர் சிராஜ் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு வயரு 65. சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிராஜ், இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக தன் திரையுலக வாழ்க்கையை தொடங்கியவர். ராமராஜன் நடிப்பில் உருவான 'என்ன பெத்த ராசா' அவர் இயக்கிய முதல்படமாகும். 'ஊரெல்லாம் உன்பாட்டு', 'என் ராஜாங்கம்' போன்ற திரைப்படங்களையும் சிராஜ் இயக்கியுள்ளார். அவருக்கு ஆயிஷா என்ற மனைவியும் 3 பெண்களும் உள்ளனர். சிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது.