இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நாளை தொடங்குகிறது.
’இந்தியன் 2’படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், நாளை ‘ராம் சரண் 15’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பாடலுடன் தொடங்கவிருக்கிறது. படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் முதலில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது நடன இயக்குநர் ஜானி மாஸ்டரைத்தான். அதற்கடுத்துதான், இசையமைப்பாளர் தமனை அறிமுகப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை நடைபெறும் பூஜையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கலந்து கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, நாளை பூஜையுடன் துவங்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்று ஹைதராபாத் வந்தடைந்தார் இப்படத்தின் நாயகி கியாரா அத்வானி. அந்தப் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.