இயக்குநர் ஷங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாளுக்குநாள் கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதனையொட்டி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள்,நிறுவனங்கள் நன்கொடை வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனையொட்டி, திரையுலகைச் சேர்ந்த பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அந்த வரிசையில், இயக்குநர் ஷங்கர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.