“’மாநாடு’ படத்தை ரசித்துப் பார்த்தேன். தாமதமாய் பார்த்ததற்கு மன்னிக்கவும்” என்று மன்னிப்புக்கேட்டு பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூலும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு கடந்த 24 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ‘மாநாடு’ வெளியானது, இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் ”தாமதமாய் ’மாநாடு’ பார்த்ததிற்கு மன்னிக்கவும். ரசித்து பார்த்தேன். சிம்பு, எஸ்.ஜே சூர்யா அருமை. யுவன், வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது விடாமுயற்சிக்கும் அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி” என்று பாராட்டியுள்ளார்.