சினிமா

ஷாட் ரெடி சொன்னவரே நடிக்க வருகிறார்.. கதைக்கு நாயகனாகும் செல்வராகவன்!!

ஷாட் ரெடி சொன்னவரே நடிக்க வருகிறார்.. கதைக்கு நாயகனாகும் செல்வராகவன்!!

webteam

இயக்குநர் செல்வராகவனின் படங்கள் தனித்துவமானவை. கதையில், திரையில் கதை சொல்லும் முறையில் என தனிப்பாதையை உருவாக்கிக்கொண்டவர். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிகண்ட செல்வராகவன், முதன்முறையாக சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிக்கவருகிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ளார். நடிகராக அறிமுகமாகும் செல்வராகவனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். கீர்த்தி சுரேஷூடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளதாக படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் வெளியாகியுள்ளது.

சாணிக் காயிதம் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். எண்பதுகளில் நடந்த உண்மைச் சம்பவமே ஆக்சன் க்ரைம் கலந்த திரைக்கதையாக வருகிறது என்றும் முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.