கவுதம் கார்த்திக், மும்பை மாடல் சனா மகபூல், டேனியல் அன்னி போப் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரங்கூன்’. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் குறைந்த காலத்தில் 2.2. மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இதன் பாடல்கள் 30ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி ராஜ்குமார் பெரியசாமி கூறும்போது, ‘ இது இளைஞர்களுக்கான படம். கவுதம் கார்த்திக் இளைஞர்களின் பிரதிநிதி. அவரது உற்சாகமும் வேகமும் படத்துக்கு உயிர் கொடுக்கும். ரங்கூன் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும். இதுவரை யாரும் அதிகம் படம்பிடிக்காத பர்மாவில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம்’ என்றார்.