சினிமா

ஜனவரி 7-ல் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜனவரி 7-ல் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

sharpana

ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

வரும் அக்டோபர் 13-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், தியேட்டர்கள் திறக்கப்படாததால் புதிய வெளியீட்டுத்தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்தது படக்குழு. இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.