சினிமா

ஆர்.கண்ணன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

ஆர்.கண்ணன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் ஹன்சிகா

sharpana

ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக், மிர்ச்சி சிவா நடிப்பில் ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்டப் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ஆர்.கண்ணன் அடுத்ததாக நடிகை ஹன்சிகா மோத்வானியை வைத்து ஃபேண்டஸி ஹாரர் காமெடி படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ஹன்சிகா இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ஈசிஆரில் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கவுள்ளார்கள்.

இப்படத்தின், ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் செய்கிறார். வசனத்தை சித்தார்த் சுபாவெங்கட் எழுதுகிறார். கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை உடனடியாக முடித்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹன்சிகா நடிப்பில் விரைவில் ‘மகா’ வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.