சினிமா

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு நிறைவு

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு நிறைவு

sharpana

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து, சத்தமில்லாமல் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.ரஞ்சித். இதனை தனது பேட்டிகளிலும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் ‘சார்பட்டா’ துஷாரா விஜயன், அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

பா.ரஞ்சித் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களும் நிறைவடைந்ததையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படக்கூடிய காதல்கள்தான் ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தை, முடித்துவிட்டு விக்ரமின் ‘விக்ரம் 61’ படத்தை பா.ரஞ்சித் இயக்குகிறார். அதோடு, பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’ வரும் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.