இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. மார்கழியின் பாரம்பரிய இசை கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மக்கள் சார்ந்த கலைகளை முன்னிறுத்தி, சமூக நீதியையும் விடுதலையையும் பேசும் இந்நிகழ்ச்சி சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி, இன்றைய தொடக்கவிழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பறை இசைத்து நிகழ்ச்சியை தொடக்கிவைத்தனர்.