சினிமா

பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. பல சர்வதேr திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வானது. இந்த நிலையில், ‘குதிரைவால்’ வரும் மார்ச் 4-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.