சினிமா

’அடி... அடி’: பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்’ முதல் பாடல் நாளை வெளியீடு

’அடி... அடி’: பா. ரஞ்சித் தயாரிப்பில் ‘ரைட்டர்’ முதல் பாடல் நாளை வெளியீடு

sharpana

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘ரைட்டர்’ படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்சன்ஸ் சார்பாக மாரி செல்வராஜ், லெனின் பாரதி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஜேக்கப், சுரேஷ் மாரி ஆகிய 5 இயக்குநர்களின் படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.இந்த 5 இயக்குநர்களின் படங்களில் முதலாவதாக பிராங்க்ளின் ஜேக்கப்பின் ‘ரைட்டர்’ திரைப்படத்தின் அறிவிப்பும் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமீபத்தில் வெளியானது. இதில், சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ளார்.

'96' படப் புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாவதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில், முதல் பாடலான ‘அடி அடி’ பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.