சினிமா

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

sharpana

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடித்துள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இயக்குநர் பா.ரஞ்சித் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து ’இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தையும் தயாரித்தார். அப்படமும் விமர்சன ரீதியாக மட்டும் பாராட்டுக்களைக் குவித்தது.

இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் தனது நீலம் புரடொக்‌ஷன்ஸ் சார்பாக 5 படங்களை இயக்குவதாக அறிவித்தார். இந்த 5 படங்களையும் நீலம் புரடொக்‌ஷன்ஸுடன் லிட்டில் ரெட் கார்டு ஃபிலிம்ஸ், கோல்டன் ரேஷன் ஃபிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கின்றன.

இந்த 5 படங்களில் யோகிபாபு நடிக்கும் ’பொம்மை நாயகி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 23 ஆம் தேதி தொடங்கியது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்தது. இதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் யோகி பாபுவுடன் படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.