இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
’சைக்கோ’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மிஷ்கின் ‘பிசாசு 2’ படத்தை இயக்கி வருகிறார். ஆன்ட்ரியா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டவர்கள் நடித்துவரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில், ’பிசாசு 2’ படத்தை முடித்தப்பிறகு மிஷ்கின்-அதர்வா முரளி கூட்டணி இணையவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.