சினிமா

கையில் சிகரெட்... ரத்தம் படிந்த கால்கள்: ‘பிசாசு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கையில் சிகரெட்... ரத்தம் படிந்த கால்கள்: ‘பிசாசு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

sharpana

’பிசாசு 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ’பிசாசு ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘பிசாசு 2’படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மிஷ்கின். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். திகில் கதையை மையமாக கொண்டு எடுக்கப்படும் ’பிசாசு 2' படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல், பவானிசாகர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது படக்குழு.

முழுக்க சிவப்பு நிற போஸ்டரில்.. குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கை, பலரும் பாராட்டுகளுடன் பகிர்ந்து ’இது ஃபர்ஸ்ட் லுக் இல்லை. ’லெக் லுக்’ என்று கருத்திட்டு வருகிறார்கள். இந்த வருட இறுதிக்குள் தியேட்டரில் படம் வெளியாகவிருக்கிறது என்பதையும் அறிவித்திருக்கிறது படக்குழு.