சினிமா

உதயநிதியின் ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்

உதயநிதியின் ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய மாரி செல்வராஜ்

sharpana

தனது பிறந்தநாளை ‘மாமன்னன்’ படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘பரியேறும் பெருமாள்’ மூலம் தமிழின் முன்னணி இயக்குநரானார் இயக்குநர் மாரி செல்வராஜ். அடுத்ததாக அவர் இயக்கிய ‘கர்ணன்’ அடக்குமுறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி நின்றது. இரண்டு படங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த நிலையில், நடிகர் உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வருகிறார். உதயநிதியுடன் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கடந்தவாரம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படக்குழுவினருடன் இன்று தனது 38 வது பிறந்தநாளை உற்சாகமுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் மாரி செல்வராஜ். இந்நிகழ்வின் போது உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், கலை இயக்குனர் குமார் கங்கப்பன் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.