சினிமா

முழுக்க இரவில் நடக்கும், ’இரவுக்கு ஆயிரம் கண்கள்!

முழுக்க இரவில் நடக்கும், ’இரவுக்கு ஆயிரம் கண்கள்!

webteam

அருள்நிதி, மஹிமா ஜோடியாக நடிக்கும் படம், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. திரில்லர் படமான இதை, பத்திரிகையாளர் மாறன் இயக்கி உள்ளார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசை அமைத்திருக்கிறார்.

படம் பற்றி இயக்குனர் மாறன் கூறும்போது, ’மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட் திரைக்கதை தான்.

சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி - மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், அடுத்த கட்டத்துக்கும் எடுத்து சென்றுள்ளது' என்றார்.