மகிழ் திருமேனி - விஜய் web
சினிமா

”விஜய் இடம் 3 கதைகளை கூறினேன்.. அவர் ஒரு கதை தேர்வு செய்தார்” - சுவாரசியம் பகிர்ந்த மகிழ் திருமேனி

விஜய் சாரிடம் நான் மூன்று கதையை கூறினேன், அவரும் ஒரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார், ஆனால் அது நடக்காமல் போனதாகவும், தற்போது வரை அந்த 3 கதைகளும் அவருக்காக காத்திருப்பதாகவும் இயக்குநர் மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

Rishan Vengai

மீகாமன், தடையறத்தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, தற்போது நடிகர் அஜித்குமாரை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் இயக்குநர் மகிழ் திருமேனி பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது. தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கான வேலைகள் நடந்துவருகின்றன.

மகிழ் திருமேனி

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் விஜய்க்கு கதை சொன்னதையும், அதை அவர் நடிக்க ஒப்புக்கொண்ட விசயத்தையும் பகிர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்க்கான 3 கதைகளும் அப்படியே இருக்கிறது..

நடிப்பதிலிருந்து விலகி முழுமையாக அரசியலுக்கு செல்வதாக அறிவித்திருக்கும் விஜய், தற்போது தன்னுடைய கடைசி படமான 69வது படத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துவருகின்றனர்.

இந்த சூழலில் தான் விஜய் உடன் பணியாற்றும் வாய்ப்பு தள்ளிப்போனதாக இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலின் படி சமீபத்திய நேர்காணலில் பேசியிருக்கும் மகிழ் திருமேனி. “நான் 3 கதைகளை விஜய்யிடம் சொன்னேன், அப்போது நீங்கள் குழப்பத்தில் இருக்கிறீர்கள் மகிழ், 3 கதைகளும் நன்றாக உள்ளன. ஆனால் இதிலிருந்து ஒன்றை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார். பிறகு நான் ஒரு கதையை தேர்ந்தெடுத்தேன், விஜய்யும் அதில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் அப்போது நான் கலகத்தலைவன் படத்திற்காக கமிட்டாகியிருந்தேன். விஜய் சார் படத்துக்குப் பிறகு கலகத்தலைவன் படத்தில் பணியாற்றுகிறேன் என்று உதய் சாரை சமாதானப்படுத்த முயற்சித்தேன், ஆனால் அது நடக்கவில்லை. அதனால் நான் விஜய் சாரிடம் இதைப் பற்றி தெரிவித்தேன், அவர் கலகத்தலைவனுக்குப் பிறகு இதைச் செய்யலாம் என்று கூறினார்.

தற்போது வரை அந்த 3 கதைகளும் விஜய்க்காக இன்னும் காத்திருக்கிறது. அதற்கான பதிலை அவரே சொல்ல வேண்டும்” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.