சினிமா

ஆண்டவருக்கு நன்றி: கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

ஆண்டவருக்கு நன்றி: கமலை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

webteam

தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குநர்களில் நம்பிக்கைக்குரிய பெயராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். கார்த்தி நடித்த கைதி படத்திற்குப் பிறகு அவரது கிராஃப் எகிறியது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகவுள்ள நிலையில், புதிய படத்தில் கமலுடன் இணைவதாக லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமல் படத்தை அவர் இயக்குகிறார். ஆண்டவருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், "ஒன்ஸ் அப்பான் ஏ டைம் தேர் லிவ்டு ஏ கோஸ்ட்" என்று ஆங்கில வாசகத்துடன், துப்பாக்கிகளால் உருவாக்கப்பட்ட கமலின் உருவத்தைக் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

படத்திற்குத் தலைப்பிடவில்லை. ஆனால் கமல்ஹாசன் 232 என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசை சேர்ப்பவர் அனிருத். 2021 ஆம் ஆண்டு கோடையில் படத்தை வெளியிடவுள்ளதாகவும் போஸ்டரில் தகவல் வெளியாகியுள்ளது.