கொரோனா தடுப்பு பணிகளுக்காக உதவ, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையொட்டி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பொதுமக்களும் தொழில் நிறுவனங்களும் நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று பல துறையினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் லிங்குசாமி முதல்வர் நிவாரண நிதிக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியை சந்தித்து 10 லட்சம் நிதியுதவி அளித்திருக்கிறார். ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் வசந்தபாலனை பிபிஇ உடையில் சென்று லிங்குசாமி சந்தித்தது நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இப்போது, முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி அளித்திருப்பது இன்னும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.