சினிமா

”அப்டேட் எங்க ஆண்டவரே?” - எமோஜியைப் பார்த்து 'ஆங்ரி பேர்ட்' ஆன கமல் ரசிகர்கள்!

sharpana
நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்காக ட்விட்டர் சிறப்பு எமோஜி வெளியிட்டுள்ளது படக்குழு.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு வெளியாகும் கமல்ஹாசன் படம் என்பதால் ‘விக்ரம்’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிகிடக்கின்றன. அதுவும், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி என மாஸ் ஹீரோக்களும் ஃபேஸ் காட்டி நடித்திருப்பதால், தமிழகம் தாண்டியும் ‘விக்ரம்’ ரசிகர்களின் விஷ் லிஸ்டில் உள்ளது.
‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். காளிதாஸ் ஜெயராம், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஜுன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ வெளியாகவுள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விக்ரம் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தது படக்குழு. இதனால், மாலை 6 மணியைக் கொண்டாட கமல்ஹாசன் ரசிகர்களும் விக்ரமை கொண்டாட மாலை 6 மணியும் காத்திருந்தது. ஆனால், சொன்னபடி ‘விக்ரம்’ அப்டேட் 6 மணிக்குக் கொடுக்காததால் ‘சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே’ ரேஞ்சுக்கு ட்விட்டரில் அப்டேட் கேட்டு ரணகளமாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.
“அப்டேட் விட வக்கில்ல உனக்கு. அன்னோன்ஸ்மெட் மட்டும்தான் கேடு உனக்கெல்லாம்”... “காலைல தான் உன்னை பத்தி நல்ல புரடக்ஷன் பண்றாங்க புரமோஷன் பண்றாங்கன்னு பெருமையா சொன்னேன்”... ”அட்மின் தூங்கிய காரணத்தினால் அப்டேட் 7 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்றெல்லாம் ஆண்டரை கூண்டோடு ஏற்றும் விதமாக கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜையும் செம்ம காண்டோடு ட்விட்டரில் இழுத்துவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், ’விக்ரம்’ படத்தின் சிறப்பு எமோஜியை வெளியிட்டுள்ளது படக்குழு. கமல்ஹாசன் படத்திற்கு கிடைத்திருக்கும் முதல் எமோஜி இது. ஏற்கனவே, ‘மாஸ்டர்’, ‘ஜகமே தந்திரம்’ படங்களுக்குக் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், எமோஜிதான் ‘விக்ரம்’ படத்தின் அப்டேட்டா என்ற ஏமாற்றத்தையும் ஆங்ரி பேர்ட்ஸாய் மாறி ட்விட்டரை ரணகளமாக்கி வருகிறார்கள் ரசிகர்கள்.