சினிமா

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி

webteam

இயக்குநர் ஹரி கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆறு, சிங்கம், சாமி போன்ற வெற்றித்திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி கடும் காய்ச்சல் காரணமாக பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹரியுடன் பணியாற்றிய நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஹரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இயக்குநர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நெய்க்காரப்பட்டியில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் ஹரி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.