சினிமா

''மக்கள் நிராகரிக்க வேண்டும்'' - 'இரண்டாம் குத்து' படம் குறித்து பதிவிட்ட சேரன்.!

webteam

'இரண்டாம் குத்து' போன்ற படங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என நடிகரும் இயக்குநருமான சேரன் தெரிவித்துள்ளார்

சில நாட்களுக்கு முன்பு வெளியான 'இரண்டாம் குத்து' படத்தின் டீசரும் போஸ்டரும் எல்லை மீறிய ஆபாசத்துடன் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வந்தன. திரைத்துறையுலகைச் சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக இயக்குநர் பாரதிராஜா, அந்தப் படத்தின் டீசர் காட்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து 'இரண்டாம் குத்து' இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், பாரதிராஜாவின் டிக் டிக் டிக் படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். பின்னர் அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்துவிட்டேன். அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக்கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டு ட்விட்டரில் கடிதம் ஒன்றைப் பதிவிட்டார்

இந்நிலையில் இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகரும் இயக்குநருமான சேரன், மக்கள் இது போன்ற படங்களை நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நல்ல வசூலை ஈட்டியதே இதுபோன்ற இரண்டாம் பாகம் வெளியாக காரணமாகிறது. இப்படத்தின் போஸ்டர் அருவெறுப்பானது. அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசும் இதுமாதிரியான படங்களை தடை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.