விஷாலை எதிர்த்து இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நண்பர்களுடன் விஷால் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போட்டியிடுவது குறித்து இன்று விஷால் அறிவிப்பார் என்று செய்திகள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து கூறு வருகின்றனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்றுதான் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தேன்..இன்று பேசத்தூண்டுகிறது.விசால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படி பார்க்கிறீர்கள் அனுமதிப்பது சரியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.