சினிமா

பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா..!

பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா..!

webteam

இயக்குனர் பாலா இயக்கும் அடுத்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலாவின் ஒரு படத்தில் நடித்தாலே போதும் நம்மை பட்டை தீட்டி விடுவார் என பல ஹீரோ, ஹீரோயின்கள்

நினைப்பதுண்டு.

இந்நிலையில், இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்

சூர்யாவை வைத்து பாலா இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் செம ஹிட் அடித்ததையடுத்து, சூர்யா மனைவி ஜோதிகா

பாலாவின் அடுத்த படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜோதிகா தற்போது நடித்துவரும் மகளிர் மட்டும் படத்தினை தொடர்ந்து, பாலா படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பாலாவின் மனைவி மலர் மற்றும் ஜோதிகா நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.