சினிமா

இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் வெற்றி

இயக்குநர் சங்கத் தேர்தலில் விக்ரமன் வெற்றி

Rasus

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக விக்ரமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் விக்ரமன் தலைமையில் புது வசந்தம் என்ற அணியும், ஜெகதீசன் தலைமையில் புதிய அலைகள் என்கிற அணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் வாக்களிக்க 2 ஆயிரத்து 300 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில் ஆயிரத்து 605 பேர் மட்டும் வாக்களித்திருந்தனர்.

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற சில மணி நேரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விக்ரமன் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக ஆயிரத்து 532 வாக்குகள் கிடைத்தன. வெற்றிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் விக்ரமன் இதுவரை நடந்த இயக்குநர் சங்கத் தேர்தலிலேயே இத்தனை அதிக வாக்குகளை யாரும் பெற்றதில்லை என்றும், தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் செயல்படுவேன் என்றும் கூறினார்.