முதல்வர் CAA குறித்து தெரியாமல் ஆதரவு அளித்துள்ளார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரத்துக்கு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று சென்னையில் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் செய்தியாளர்களை சந்தித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் அமீர், தமிழக முதல்வர் CAA குறித்து தெரியாமல் ஆதரவு அளித்துள்ளார். NRC & NPRஐ அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்தால் மக்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள். இடைத்தேர்தல் என்றால் மட்டும் அமைச்சர் உட்பட அனைவரும் செல்கிறார்கள்.
முதல்வர், துணை முதல்வர் ஏன் வண்ணாரப்பேட்டை மக்களை சந்தித்து பேச மறுக்கின்றனர். திரைத்துறை பலவீனமாக இருக்கும்போது இதுபோன்ற பிரச்னைகளுக்கு எப்படி குரல் கொடுப்பார்கள்? ஆளும் அரசுக்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள் என தெரிவித்தார்.