விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இயக்குநர் அமீர் விஜயை விமர்சித்துள்ளார். விஜய், த்ரிஷா உடன் ஒரே நிற ஆடையுடன் தோன்றியதற்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய் தலைமையில் மகளிர் தினவிழா நடத்தப்படவிருப்பது, அரசியல் நிகழ்ச்சியாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்திலும், திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, விஜய்க்குத் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகப் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கும் சங்கீதா, நடிகை ஒருவருடன் விஜய் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது, பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் விஜய் விவகாரத்து வழங்க மறுப்பதாகவும், தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்தசூழலில் சங்கீதா விவாகரத்து மனுத்தாக்கல் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இந்தசூழலில் விஜய், நடிகை த்ரிஷா உடன் ஒரே நிற ஆடையுடன் பொதுவெளியில் தோன்றியபிறது, விஜயின் ஆதரவாளர்களே விஜய்க்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இயக்குநர் அமீர், தவெக தலைவர் விஜயை விமர்சித்துள்ளார்.
ஒருபக்கம் விஜய்-சங்கீதா விவாகரத்து பிரச்னை சென்றுகொண்டிருக்கும் நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் தலைமையில் மகளிர் தினவிழா நடத்தப்படவிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தரப்பில் பெண்களுகான தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் விஜயை விமர்சித்திருக்கும் இயக்குநர் அமீர், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டோரியில் பதிவிட்டு விமர்சித்துள்ளார்.
இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.