சினிமா

மன்மதன், வல்லவன் போன்று ஒரு சிம்பு-யுவன் படத்தை எதிர்பார்க்கிறேன் : ’பிரேமம்’ இயக்குநர்

மன்மதன், வல்லவன் போன்று ஒரு சிம்பு-யுவன் படத்தை எதிர்பார்க்கிறேன் : ’பிரேமம்’ இயக்குநர்

sharpana

’மன்மதன்’, ’வல்லவன்’ போன்று யுவன் இசையில்  சிம்பு இயக்கும் ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என்று ’பிரேமம்’ இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்திருக்கிறார்.

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு ‘மன்மதன்’, 2006 ஆம் ஆண்டு ‘வல்லவன்’ படங்களை இயக்கி திறமையை வெளிப்படுத்தினார் சிம்பு. இரண்டு படங்களும் வெற்றி பெற்றதோடு பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. 90ஸ் கிட்ஸ்கள் யுவனின் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்றால், அதற்கு மிக முக்கியமாக யுவன் - சிம்பு கூட்டணியின் இந்த இரண்டு படப்பாடல்களும் ஒரு காரணம். படம் வெளியாகி 15 வருடங்களுக்குமேல் ஆனாலும் இப்போதும் பலரின் ஃபேவரைட் பாடல்களாக ப்ளே லிஸ்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

 ‘மன்மதன்’, ‘வல்லவன்’, ‘சிலம்பாட்டம்’, ‘வானம்’ படத்திற்க்குபிறகு மீண்டும் சிம்பு-யவன் கூட்டணி ‘மாநாடு’ படத்தில் இணைந்துள்ளனர்.  இப்படத்தின், முதல் பாடல் மெஹ்ரசைலா வெளியாகி கவனம் ஈர்த்துள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜா சிம்புடன் இருக்கும் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், ‘நேரம்’, ‘பிரேமம்’ இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் “மன்மதன், வல்லவன் போன்ற யுவன் ஷங்கர் ராஜா இசையுடன் சிம்பு இயக்கும் ஒரு படத்தை பார்க்க விரும்புகிறேன். நீங்கள் இரண்டு பேரும் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் இணைந்து பணிபுரிய வேண்டும் என ஆசைப்படுகிறேன். உங்கள் படைப்புக்கு ஒரு சிறிய ரசிகரிடமிருந்து ஒரு சிறிய வேண்டுகோள்” என்று பாட்டுக்களுடன் கோரிக்கையும் வைத்திருக்கிறார்.