சினிமா

“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்

“இதுதான் ரஜினி படம்” - பேட்ட குறித்து தினேஷ் கார்த்திக்

webteam

நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் 'பேட்ட'தான் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ள ‘பேட்ட’ படம் தமிழகம் முழுவதும் 450-க்கும் அதிகமான திரையரங்குகளில் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் மேளதாளம், கட்அவுட் என ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் தமிழகத்திலேயே மிகப்பெரிய கட் அவுட்டை வைத்து தூத்துக்குடி ரசிகர்கள் ‘பேட்ட’ படத்தை கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில், நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் பேட்டதான் என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “ ‘பேட்ட’. ஓ மை காட், நான் நீண்ட நாட்களாக காத்திருந்த ரஜினி படம் இதுதான். ஒரு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு  வெளியே வரும்போது உங்கள் புன்னகையிலேயே தெரியும் அந்தப் படம் உங்களுக்கு எவ்வளவு பிடித்திருக்கு என்பது.

இதுபோன்ற அற்புதமான ரஜினி படத்தை எடுத்ததற்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்துகள். சிறந்த பின்னணி இசையமைத்துள்ளார் அனிருத். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.