நடிகை பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் கைதாகி உள்ள நடிகர் திலீப்புக்கு சொந்தமான ஹோட்டல்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
கொச்சியில் நடிகை பாவனா காரில் சென்று கொண்டிருந்தபோது கடத்தப்பட்டு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார். இந்த வழக்கில், கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நடிகர் திலீப் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ அமைப்பில் இருந்து நடிகர் திலீப் நீக்கப்பட்டார். இந்நிலையில் திலீப்புக்கு சொந்தமாக கேரளாவில் பல நகரங்களில் ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்கள் மீது சிலர் புகுந்து கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் அடித்து நொறுக்கினர். இதனால் திலீப்பிற்கு சொந்தமான கட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தி புட்டு என்ற பெயரில் நடிகர் திலீப்புக்கு சொந்தமாக கொச்சி, சாலக்குடி, கோழிக்கோடு ஆகிய நகரங்களில் சொந்தமாக ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.