துரந்தர் x page
சினிமா

பாக்ஸ் ஆபீஸ் வசூல் | 4 வாரத்தில் இத்தனை கோடியா? சாதனை படைக்கும் ‘துரந்தர்’!

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் அக்‌ஷய் கன்னா நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,078 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Prakash J

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் அக்‌ஷய் கன்னா நடிப்பில் வெளியான 'துரந்தர்' திரைப்படம், இதுவரை இல்லாத அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் ரூ.1,078 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் மற்றும் அக்‌ஷய் கன்னா நடிப்பில் வெளியான திரைப்படம் 'துரந்தர்'. இப்படம், இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியாகி நான்காவது வாரத்தில், உலகளாவிய வசூல் ரூ.1,078 கோடியை எட்டியுள்ளது. இதன்மூலம், இன்றுவரை அதிக வசூல் செய்த பாலிவுட் படமாக ’துரந்தர்’ மாறியுள்ளது. ஹாலிவுட் படமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ மற்றும் ’மேரி மைன் தேரா மைன் தேரா து மேரிஇக்கிஸ்’படங்களுக்கு இடையே ’துரந்தர்’ படமும் கடுமையான போட்டியைச் சந்தித்தது. எனினும், ’துரந்தர்’ படம் பாக்ஸ் ஆபீஸில் வெறும் 25 நாட்களுக்குள் ரூ. 700 கோடி உள்நாட்டு நிகர வசூலைத் தாண்டியுள்ளது.

துரந்தர்

முதல் வாரத்தில் ரூ. 207.25 கோடியை வசூலித்த துரந்தர் படம், இரண்டாவது வாரத்தில் ரூ. 253.25 கோடியையும், மூன்றாவது வாரத்தில், ரூ. 172 கோடியை வசூலித்துள்ளது. நான்காவது வாரத்தின் தற்போதைய மொத்த வசூல் ரூ. 68.5 கோடியை எட்டியுள்ளது. சர்வதேச அளவில், சுமார் ரூ.237 கோடி வசூலித்துள்ளது. இதன் உலகளாவிய மொத்த வசூல் ரூ.1,078 கோடியாக உள்ளது கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த படம் ’கல்கி 2898 AD’ மற்றும் ’பதான்’ உள்ளிட்ட முக்கிய படங்களின் வசூலை முறியடித்து , ஷாருக்கானின் ஜவானின் வாழ்நாள் உலகளாவிய வசூலை நெருங்குவதாகக் கூறப்படுகிறது. இதே வேகத்தில் துரந்தர் படம் பயணிக்குமானால், சக்னில்கின் கூற்றுப்படி, இந்த படம் எல்லா காலத்திலும் நான்காவது அதிக வசூல் செய்த இந்திய படமாக மாறும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, KGF: அத்தியாயம் 2 (ரூ. 1,215 கோடி) மற்றும் RRR (ரூ. 1,230 கோடி) ஆகிய படங்கள் ரூ.1,200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன.