சினிமா

பெப்பர் அண்ட் சால்ட் கெட்அப்பில் விக்ரம்

பெப்பர் அண்ட் சால்ட் கெட்அப்பில் விக்ரம்

webteam

விக்ரம் பெப்பர் அண்ட் சால்ட் கெட்அப்பில் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ சமீபத்தில் இஸ்தான்புல் போன இந்தப் படகுழு துருக்கி எல்லையில் சிக்கி தவித்து வருவதாக கெளதம் மேனன் பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டார். அங்கு விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ் சிக்கிக் கொண்டுள்ளதாக செய்தி பரவியது. பின் அந்த நிலைமை சரியாதாக அவரே தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று ட்விட்டரில் சீயான் விக்ரம் பெப்பர் அண்ட் சால்ட் கெட்அப்பில் உள்ள புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் சட்டையில்லாமல் அவர் தாடியும் நரைத்த முடியுமான தோற்றத்தில் இருக்கிறார். அந்தப் படம் இன்று காலை முதலே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.